×

திருவளர்மங்கலம் மகாமாரியம்மன் கோயிலில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி

நாகப்பட்டினம், மே3: திருமருகல் அருகே திருவளர்மங்கலத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இதன்படி நேற்று திருவிழாவை முன்னிட்டு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை மாவிளக்கு போடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து சக்தி கரகம், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். இதை தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர்,பன்னீர்,இளநீர்,சந்தனம், நெய்,தேன்,திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா மாரியம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு அன்ன வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது.

The post திருவளர்மங்கலம் மகாமாரியம்மன் கோயிலில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Cooking ,Thiruvalarmangalam Mahamariyamman Temple ,Nagapattinam ,Maha Mariamman Temple ,Thiruvalarmangala ,Thirumarukal ,Chitra Festival ,Porridge Cooking Show ,Thiruvalarmangalam Mahamaryamman Temple ,
× RELATED நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில்...